Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார்.
அதேபோல சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

ராயன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. முதலில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ரிலீஸ் மே மாதத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிலையில், குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடும் என நம்பப்படுகிறது.கமல்லின் இந்தியன் 2 படம் வெளியாகும் சமயத்தில் ராயன் படமும் வெளியானால் வசூல் பாதிக்கப்படலாம் என்பதால் தான் ராயன் பட ரிலீஸ் ஜூலைக்கு தள்ளி போனதாக கூறப்படுகிறது

ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலைக்கு தள்ளி வைத்துள்ளதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் பிற விளம்பர நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார். கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News