வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடந்துவந்தது.இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.இதனால் சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலுக்கு செல்ல முடிவெத்துள்ளார்அதேசமயம் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றநிலையில் அந்தப் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக இருக்கிறது.

தற்போது நடித்து வரும் கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர்.முதன்முறையாக விஜய் வெங்கட் பிரபு கூட்டணி அமைத்திருப்மதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம் தான்.

இதுமட்டுமின்றி விஜய்யின் தளபதி 69 படத்தை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி அந்தப் படத்தை இயக்கபோவது வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, ஹெச்.வினோத் ஆகிய நான்கு பேரில் ஒருவர் என சொல்லப்பட்டு வந்தநிலையில் வெற்றிமாறன் தான் நிச்சயம் இயக்குவார் என பேசப்பட்டது ஆனால் கடைசியில் அதிகாரபூர்வமாக சொல்லப்படமால் இருந்தாலும் ஹெச்.வினோத் தான் இப்படத்தை இயக்க போகிறார் என தகவல் வந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் வெற்றிமாறன் கலந்துகொண்ட ஒருநிகழ்ச்சியில் தொகுப்பாளர் வெற்றிமாறனிடம், நீங்கள் தளபதி 69 படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வருகின்றனவே அதைப்பற்றி ஏதாவது கூற முடியுமா என கேட்க அதற்கு வெற்றிமாறனோ, அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை என்று கூறினார் இதை வைத்து பார்க்கும் போது விஜய் வெற்றிமாறன் கூட்டணி இப்போதைக்கு இணையவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கருத்துப்படுகிறது.
