வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் புகழ்பெற்றவர் காமெடியன் சூரி. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்தவர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அந்த படம் வெற்றி பெற்றது, அவர் தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் கருடன் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளார் சூரி. அங்கு கூலிங் கிளாஸ் போட்டபடி கால் மேல் கால் போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து, நடிகர் சூர்யா இது, ஆள் அடையாளமே தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும், சூரி நடிப்பில் விடுதலை 2, கொட்டுக்காளி, ஏழுகடல் ஏழுமலை ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.