தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் ஹீரோவாக வலம் வருபவர். சிவகார்த்திகேயன்.ஆரம்பத்தில் காமெடியை வைத்து ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் அதற்கு பின்னர் ஆக்சன், பயோபிக்கென வேற ரேஞ்சுக்கு சென்றுவிட்டார்.தொடர்ந்து பிஸியாக அடுத்தடுத்த படப்பிடிப்பு வேளைகளில் உள்ளார்.
இந்நிலையில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவராகர்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைபடம்.இந்த படத்தின் கதை மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் தான்.இப்படம் படம் ஷூட்டிங் முகுமையாக முடியாத முன்பே பலமடங்கு வியாபாரத்தை பெற்றது.ஆனால் இப்படத்தின் படப்பிடிப்போ இன்னும் முடியாமல் தத்தளிக்கிறது.
அமரன் படத்தின் ஷூட்டிங் மிகவும் மந்தமாக நடப்பதால் சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து அடுத்த படமான SK23வில் இணைந்தார்.SK23 ஷூட்டிங் வெகுவாக நடைபெற்று வருகிறது.இதுவரை பாத்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் அமைந்து உள்ள இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.இது தவிர சிவகார்த்திகேயனுக்கென பயிற்சியாளரை நியமித்து உள்ளார் இயக்குனர் முருகதாஸ்.
முன்னரே அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் செய்தியை முடிவு செய்துவிட்டு அதற்குள் ஷூட்டிங்கை முடிக்க என கமல் தெரிவித்து உள்ளாராம்.இன்னும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் கால்சீட் 20 நாட்கள் மீதம் இருக்கவே அமரன் படத்திற்கு கால் சீட் வேணும்னு கேட்கிறார் கமல்.ராஜ்கமல் புரொடக்ஷனில் எஸ் கே நடித்த அமரன் படம் இன்னும் முடியவில்லை அதற்குள் முருகதாஸ் SK23 படத்தை இயக்க ஆரம்பித்து முடிக்க போகிறார்.
கமலஹாசன் கண்டிப்பாக அமரன் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு பின்னர் செல்லவும் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் படத்தை முடித்துவிட்டு பாலிவுட்டில் சல்மான் கான் படத்தை இயக்க போவதாக இருந்த நிலையில் கமலின் இந்த முடிவால் கடுப்பில் முருகதாஸ் செம்ம கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.