Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஒற்றை போஸ்டாரால் கடுப்பான ரசிகர்கள்! அப்டேட் கேட்ட ரசிகர்களின் விடா முயற்சி வீண் முயற்சி ஆனது தான் மிச்சம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமாரின் பிறந்தநாளையொட்டி லைகா நிறுவனம் விடா முயற்சி படத்தை பற்றிய மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, கடைசியில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் மட்டுமே வெளியாகி ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என மற்ற நடிகர்கள் பலரும் தங்கள் பிறந்தநாளில் புதிய படங்களின் அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். ஆனால், அஜித்தின் பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் இல்லாமல் போனதால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அஜித் குமாரின் பல படங்களின் ஸ்டில்களை ஒன்றாக இணைத்து ஹேப்பி பர்த்டே அஜித்குமார் என்கிற போஸ்டரை மட்டும் வெளியிட்டு அஜித் குமாருக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாக வேண்டும் என லைகா நிறுவனம் வாழ்த்தியுள்ளது. ஆனால், விடாமுயற்சி படத்தின் எந்த ஒரு பிரத்யேக போஸ்டரையும் விடவில்லையே லைகா நிறுவனம் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் தீட்டி தீர்த்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் வெளியிடாமல் சமீபத்தில் சுரேஷ் சந்திரா அஜித் குமார் விபத்து ஸ்டன்ட் செய்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். சுமார் 4 மாதங்களாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு அஜித் குமார் விடாமுயற்சி ஷூட்டிங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.மே 1ம் தேதி லைகா நிறுவனம் தாறுமாறான அப்டேட் வெளியிடும் என காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் கடுப்பானது தான் மிச்சம்.

- Advertisement -

Read more

Local News