தனுஷின் “ராயன்” படம் இந்த மாதம் வெளியாவதாக உள்ள நிலையில் அடுத்த மாதம் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் விக்ரமின் “தங்கலான்” படமும் அதே போல் அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு படங்களுக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் “குபேரா” படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ளதாகவும், இடைவேளைகளில் தனுஷ் “ராயன்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.
ஒரே நேரத்தில் “ராயன்” மற்றும் “குபேரா” ஆகிய இரண்டு படங்களின் வேலைகளையும் தனுஷ் ஒரே நேரத்தில் முடித்து வருவது அவரது கடின உழைப்பே அவரது வெற்றிக்கு காரணமாக உள்ளது. “குபேரா” படத்தின் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையும் நிலையில், தனுஷ் அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் இணைய இருக்கிறார்.பின்னர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் பாலிவுட் படமான “தேரே இஷ்க் மெய்ன்” படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.