Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஏ.ஐ உதவியுடன் மலேசியா வாசுதேவன் குரலில் வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான “மனசிலாயோ” வரும் 9ம் தேதி வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.

27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் உயிர்ப் பெறச் செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம்பெற்றுள்ளன. ஓணம் பண்டிகை சிறப்பாக, இப்பாடலை படக்குழு வெளியிட உள்ளது. இந்த பாடலின் கிலிம்ப்ஸ் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News