விஜய் நடிப்பில் வெளிவர உள்ள 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது.படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, சொன்னதைவிடச் சிறப்பாக ‘தி கோட்’ படத்தை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கே சிறப்பான விளையாட்டுத்தனம், காமெடி உள்ளிட்ட அம்சங்களுடன் ஆக்ஷன் காட்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
எடுத்தவரையிலான காட்சிகளை ரஃப் எடிட்டில் பார்த்த விஜய்க்கு படம் மிகவும் பிடித்துள்ளது. ஆனாலும், படத்தின்மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என விஜய் கூறியுள்ளார். அடக்கி வாசிக்கவும் என படக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.