மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்திற்க்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை அளித்தனர். அடுத்ததாக விஜய்யுடன் நடித்திருக்கும் GOAT படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை சுஹாசினி, மோகனிடம் ‘கமல் ஹாசன் வந்தால் நீங்கள் எழுந்து போய்விடுவீர்கள். ஏன் கமல் மீது பயமா?’ என்று கேட்டார். அதற்கு மோகன், ‘கமல் மீது எனக்கு என்ன பயம் அப்படி எந்த பயமும் இல்லை, அவர் மீது எனக்கு மிகவும் மரியாதைதான் இருக்கு…
உங்களிடம் பேசுவதை போல் அவரிடம் ஜாலியாக சட்டென்று எல்லாம் பேச முடியாது அவர் உயர்ந்த மனிதர்…மிகப்பெரிய நடிகர்…. அதனால்தான் அப்படி என்று கூறியுள்ளார்.