அஜித் பற்றி விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர், “குஷி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அஜித் வந்திருந்தார். அப்போது பேசிய அவர், விஜய்யும் நானும் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது விஜய்யின் வீட்டிலிருந்து எனக்கும் சேர்த்து உணவு வரும். ஷோபா அம்மாவின் கையால் நான் சாப்பிட்டிருக்கிறேன். அதை என்னால் மறக்கவே முடியாது என கூறினார். அவர் அப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்றார்.
