பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘சர்தார் 2’. 2022-ல் வெளியான ‘சர்தார்’ படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்தவர் ஜி.வி. பிரகாஷ்குமார். ஆனால் இரண்டாம் பாகத்திற்கான இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ‘சர்தார் 2’ திரைப்படத்திலிருந்து யுவன் சில காரணங்களினால் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘சர்தார் 2’ படத்துக்காக அதிக நாட்கள் காத்திருந்தும், இசை பணிகள் தொடங்கப்படாததால் யுவன் திட்டத்தில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, தற்போது சாம் சிஎஸ் இந்த படத்துக்கான புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.