ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமான யாத்ரா 2 திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஒய்எஸ்ஆர் வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டியாக தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.
சோனியா காந்தி கதாபாத்திரத்தில் சுசான் பெர்னர்ட் நடிக்கவுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமான சோனியா காந்தியும் யாத்ரா 2 இல் வருகிறார். அவரது பாத்திரத்தில் ஜெர்மன் நடிகை சுசானே பெர்னெர்ட் நடிக்கிறார். 70எம்எம் எண்டர்டெயின்மென்ட்ஸ், த்ரீ ஆட்டம் லீவ்ஸ், ஷிவா மேகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யாத்ரா 2 படத்தை மஹி வி.ராகவ் இயக்குகிறார்.
சோனியா காந்தியுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்ட சுசானே பெர்னெர்ட் இந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் அகில் மிஸ்ராவின் மனைவி சுசானே. அவர் ஏற்கனவே பல்வேறு விளம்பரங்கள் மற்றும் பிற ஹிந்தி திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.