தனது மனைவி ஷாலினி குறித்து நடிகர் அஜித் குமார் சமீபத்திய ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “நான் ஷாலினிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ரேஸிங் போட்டிகளில் பங்கேற்பது, சண்டைக் காட்சிகளில் நானே நேரடியாக நடித்தல் இவையெல்லாம் எளிதான விஷயங்கள் அல்ல. என்னைப் போன்ற ஒருவருடன் வாழ்வது கடினமானது.

ஆனால் ஷாலினி எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இவையெல்லாம் அவரின் துணையின்றி சாத்தியமாகியிருக்காது” என உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
அஜித் கடைசியாக நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை இயக்கிய ஆதிக், தற்போது அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் இயக்கவுள்ளார். விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

