தல அஜீத் பல்வேறு வேடங்களில் நடித்து இருக்கிறார். அவரது பஞ்ச் டயலாக்குகள் பிரபலமானவை. ஆனால் திரை விழாக்களில் பேசுவதோ, பேட்டி அளிப்பதோ கிடையாது. அதே நேரம் தனிப்பட்ட முறையில் அவர் பேசும்போது ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவார்.
இதற்கான காரணத்தை, அவரது அண்ணன் அனல் தெரிவித்து இருக்கிறார்.
“அஜித் அதிகமாக வெளியில் பேசாதவர். அப்படியும் அவர் பேசும் சில வார்த்தைகள் ஏன், அஜித் தமிழை விடுத்து ஆங்கிலம் பேச காரணம் என ஆச்சரிய தகவலை வெளியிட்டு இருக்கிறார் அவரது அண்ணன் அனில்.
“எங்கள் அப்பா தமிழர்,அம்மா சிந்தி. அப்பாவுக்கு பல ஊர்களில் வேலை. பிறகு ஐதராபாத் வந்தோம். பிறகு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டோம். ஆகவே பல மொழிகள் பேசனாலும் அதில் முழுமையாக சரியாக பேச முடியாது.
நாங்கள் சென்னையில் வளர்ந்தாலும் தமிழில் சரளமாக பேச முடியாது. எங்கள் தமிழினை சிலர் கிண்டல் செய்வார்கள். அதனால் மனதுக்கு கஸ்டமாக இருக்கும். ஆகவேதான் ஆங்கிலத்திலே பேசினோம். தவிர நாங்கள் படித்த பள்ளியிலும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆகவே ஆங்கிலம் நன்கு பழகிவிட்டது. தமிழில் பேசும்போதும் அதனால்தான் ஆங்கில வார்த்தைகள் வந்துவிடுகிறது” என்றார்.
ஆக தல அஜீத் ஆங்கில வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் காரணம் தெரிந்துவிட்டது!