Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

விஜய்யின் 65-வது படத்தின் வில்லன் யார்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய்யின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதியன்று துவங்கிய இந்தப் படப்பிடிப்பு வரும் 22-ம் தேதிவரையிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 17 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்குள்ளாகவே படப்பிடிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

னெனில், இந்தப் படத்தின் பாடல்களுக்கான நடன ரிகர்சல் ஏப்ரல் 24-ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது. இந்தப் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மே 3-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

ஆக, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்று தமிழகமே பரபரப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கும்போது நடிகர் விஜய் நடனமாடிக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உண்மை.

இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், ஷாஜி, கலை இயக்குநர் கிரண் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வில்லனாக நடிக்கப் போவது யார் என்றுதான் தெரியவில்லை. ‘பேட்ட’ படத்தின் நவாசுதீன் சித்திக், ‘துப்பாக்கி’ படத்தின் வித்யுத் ஜம்வால் இருவரையும் படக் குழு அணுகியிருக்கிறதாம். இந்த இருவரில் ஒருவர்தான் நிச்சயமாக விஜய்க்கு வில்லனாக நடிப்பார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News