அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தினர்.
இதனிடையே நேற்று புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு, ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு, இப்படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.