நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் ‘கூலி’ படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் கூலி திரைப்படம் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூலி படத்திற்கான வரவேற்பு நன்றாக உள்ளது. ரசிகர்களின் கைதட்டல்கள்தான் இதற்கான பதில் என்றார். தொடர்ந்து, ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள். எப்போது அஜித்தை வைத்து படம் எடுப்பீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது லோகேஷ் கனகராஜ், அஜித் சாருடன் எப்போது படம் பண்ண வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது நிச்சயமாக படம் பண்ணுவேன் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் லோகேஷூடன் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், தலைவரின் 50-வது வருடத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆடினே இருப்பேன்’ என ஒரு மீம்ஸ் பார்த்தேன். அதேபோல் இனி நான் ஆடினே இருப்பேன் என்று அனிருத் கூறியுள்ளார்.