Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

தாயார் இறந்த போது கமல் செய்த ‘சம்பவம்’!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல், சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதை உறுதிப்படுத்தும்படியான ஒரு சம்பவத்தை, மூத்த பத்திரிகையாளர் அந்தனன் கூறினார். “பிராமணர் சமூகத்தில் பிறந்தவர் தான் கமல். அவரது தாயான ராஜலட்சுமி இறக்கும் போது அவரை சேர்ந்த சமூகத்தினர் மட்டும் தூக்கிக் கொண்டு சென்றிருக்கின்றனர். அப்போது அருகில் கமலின் நண்பர், பிராமணர் அல்லாதவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

சரி நாமும் ஒரு கை பிடிப்போம் என்று அந்த நண்பரும் தூக்க முற்பட்டிருக்கிறார். உடனே பிராமணர்கள் அந்த நண்பரை தள்ளி விட்டனர். . இதை பார்த்துக் கொண்டிருந்த கமல் துக்கிக் கொண்டு சென்றவர்கள் பக்கத்தில் நெருங்க அவர்களிடம் இருந்து சாராய நெடி வந்திருக்கிறது.

உடனே கமல் ‘யோவ் நீ சாராயத்தை சாப்பிட்டு என் அம்மாவை தூக்குற, ஆனால் நீ தள்ளி விட்டவன் ஒரு முட்டை கூட சாப்பிடமாட்டான், சுத்த சைவம் , அவன போய் நீ தள்ளி விடுற’ என்று சொல்லிவிட்டு அந்த நண்பரை தூக்க சொல்லியிருக்கிறார் கமல். இப்படி சாதி , சமூகம் பார்க்காமல் இன்று வரை அதை கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார் கமல்!” என்றார் அந்தணன்.

- Advertisement -

Read more

Local News