2023 ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு “துணிவு” திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, தற்போது நடிகர் அஜித்தின் புதிய திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான “விடாமுயற்சி” திரைப்படம் நேற்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இதனால், அஜித் ரசிகர்கள் திருவிழா போன்று படத்தை கொண்டாடினர். படத்தின் சிறப்பை நினைத்தே, தமிழக அரசு ஒருநாளில் 5 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தது. இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு கொண்டிருந்தனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155792-683x1024.jpg)
இந்த நிலையில், “விடாமுயற்சி” திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே சமயம் 40 கோடி வசூலித்துள்ளதாக மற்றொரு தகவல் உலாவருகிறது.