Saturday, September 21, 2024

‘ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம்’ கைவிடப்பட்டதா..? குழப்பம் நீடிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

2007-ம் வருடம் துவக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2010-ம் ஆண்டில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன்’.

இந்தப் படத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்தமைக்காக பார்த்திபனுக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்திருந்தது.

கி.பி. 1279-ம் வருடத்திய சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் ஆட்சிக் காலம் பற்றி இத்திரைப்படம் பேசியது. பட வெளியீட்டின்போது மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தாலும், கலவையான விமர்சனங்கள்தான் எழுந்தன.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 2-ம் தேதி இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தான் துவக்குவதாக அறிவித்தார் இயக்குநர் செல்வராகவன். இந்த இரண்டாம் பாகத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பதாகவும், படம் 2024-ம் ஆண்டுதான் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார் செல்வா.

ஆனால் தற்போது இந்தப் படத்தின் நிலைமை என்னவென்று தெரியாத நிலையிருந்தது. படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் சில செய்திகள் வெளியாகின. படத்தின் துவக்க வேலைகளுக்காகவே இதுவரையிலும் கோடிகளில் பணம் செல்வாகிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதற்கு உடனடியாக நேற்றைக்கே தனது டிவீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன், அதில் “எப்போது அந்த மர்மமான ப்ரீ புரொடெக்சன்ஸ் வேலைகள் நடந்தன என்பதை சகல மரியாதையோடு சொல்ல முடியுமா..? அந்தத் தயாரிப்பாளர் யார்..? தயவு செய்து இதை உங்களுக்குச் சொன்னவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்..” என்று தனது டிவீட்டில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

இருந்தாலும் படம் கைவிடப்பட்டதா.. அல்லது தொடருமா என்று அவர் குறிப்பிடாதது இந்த சந்தேகத்தை கூடுதலாக்கிவிட்டது.

இந்தக் குழப்பம் நிகழ்ந்தற்கான காரணமே இதில் நாயகனாக நடிக்கவிருக்கும் தனுஷ் கை நிறைய படங்களை வைத்திருப்பதுதான். தனுஷ் தற்போது தான் ஒப்புக் கொண்டுள்ள அனைத்துப் படங்களையும் முடித்துக் கொடுப்பதற்கே 2024 முடிந்துவிடும். அதன் பின்பு எப்போது இந்தப் படத்தை உருவாக்கப் போகிறர்கள் என்று தெரியவில்லை.

“இந்தப் படம் 2024-ல் வெளியாக வேண்டும் என்றால் அட்லீஸ்ட் 2023 ஜனவரியிலாவது இந்தப் படத்தைத் துவக்கியாக வேண்டும். வரலாற்று படம் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை நிறைய செய்ய வேண்டுமே.. இதற்கு எங்கே நேரம் இருக்கிறது.? அதோடு செல்வா தனுஷை வைத்து இயக்கும் நானே வருவேன் என்ற படமும் லைனில் காத்திருக்கிறதே.. அதை எப்போது அண்ணனும், தம்பியும் முடிப்பார்கள்..” என்றெல்லாம் கேள்வியெழுப்புகிறார்கள் தனுஷின் ரசிகர்கள்.

அடுத்த டிவீட்டில் இந்தச் சந்தேகத்தை செல்வராகவன் நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்ப்போம்..!!!

- Advertisement -

Read more

Local News