Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

சம்பவகாரனாக அதிர வைக்கும் விக்ரம்… ட்ரெண்டாகும் வீர தீர சூரன் ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘சேதுபதி’ மற்றும் ‘சித்தா’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார், தற்போது விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது, அதில் முதலில் இரண்டாம் பாகம் திரைக்கு வர உள்ளது. இந்த பாகம் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு ஆவடி வேல் டெக் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News