Friday, November 22, 2024

“நடிகர் விஜய்யை சுற்றி பல கிரிமினல்கள் உள்ளனர்…” – தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புகார்..

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து எஸ்.ஏ.சி.யின் மனைவியும் விஜய்யின் தாயுமான ஷோபாவும் விலகியுள்ளார்.

இந்த நிலையில் இந்த நிகழ்வுகள் பற்றிப் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய எஸ்.ஏ.சி., “நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததே நடிகர் விஜய்யின் நன்மைக்காகத்தான். இதனை விஜய் விரைவில் புரிந்து கொள்வார்.

தன்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் சொல்லியிருக்கிறார். அவர் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். நானும் அதைப் பார்க்கிறேன்.

விஜய் ரசிகர் மன்றம் என்பது நான் 1993-ம் ஆண்டு துவக்கிய அமைப்பு. நடிகர் விஜய்யின் முதல் ரசிகனே நான்தான். அதனால்தான் நான் ரசிகர் மன்றத்தைத் துவக்கினேன். ரசிகர் மன்றம் துவக்கியபோதும் அவரிடத்தில் அனுமதி கேட்கவில்லையே..? இந்த ரசிகர் மன்றத்தை ஒரு இயக்கமாக மாற்றியபோதும் நான்தான் நிறுவனராக இருந்தேன். அப்போது அவர் எதுவும் சொல்லவில்லையே..?

இப்போது இந்த இயக்கத்தை என் விருப்பத்தின்படி அரசியல் கட்சியாக மாற்றியுள்ளேன். இந்த இயக்கத்தில் இருக்கும் விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமே என்பதற்காக பல ஆண்டுகளாக யோசித்து, யோசித்து இன்றைக்கு ஒரு முடிவெடு்த்து இதைச் செய்திருக்கிறேன்.

எல்லா வீடுகளிலும் நடக்கும் தந்தை மகன் மோதல்போல் எங்களுக்கு இடையேயும் அவ்வப்போது சண்டை வரும். நாங்கள் இருவரும் இப்படி பேசாமல் இருப்பது அவ்வப்போது நடப்பதுதான். ஒரு சாதாரணமான விஷயம்தான்.

தற்போது விஜய்க்கே தெரியாத ரகசியம் ஒன்று அவரை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது.  விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் தற்போது சிக்கியுள்ளார் அதிலிருந்து அவரை காப்பாற்றவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

விஜய்யை சில கிரிமினல்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்களால் விஜய்யை சுற்றி ஒரு ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது என்னை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கைகூட அவராக வெளியிட்டது இல்லை. அவரைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லித்தான் வெளியிட்டிருக்கிறார்..” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

- Advertisement -

Read more

Local News