பிரபல நடிகையா ஷர்மிளா தாகூர் பல தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவில் தலைமைப் பதவியும் வகித்துள்ளார். யூனிசெஃப் நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்ற போதும் திரைத்துறை சார்ந்த நிகழ்வுகளிலும், முதியோருக்கான சேவை அமைப்புகள் சார்ந்த நிகழ்வுகளிலும் ஷர்மிளா பங்கேற்ககிறார்.
இவர் சமீபத்தில் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது மனம் திறந்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, “இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவை . தொடர்களில் பெண்களே பெண்களின் மிக மோசமான எதிரிகள் என்பதாக சித்தரிக்கப்படுகிறது. இது மிகவும் துரதிருஷ்வசமானது” என்று ஷர்மிளா தெரிவித்துள்ளார்.