Friday, April 12, 2024

‘குக் வித் கோமாளி’ அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும் புதிய திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Trident Arts நிறுவனம் புதுமையான, மிகவும் வித்தியாசமான கதைக் களம் கொண்ட படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொண்ட படங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பும் உள்ளது,

அந்த வரிசையில் Trident Arts நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பைத் துவக்கியிருக்கிறார்கள். பெயர் சூட்டப்படாத இத்திரைப்படம் இந்த நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படமாகும்.

இப்படத்தில் குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

விளம்பர பட இயக்குநராகப் பணியாற்றிய ஹரிஹரன், இந்த படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படம் ரொமான்டிக், காமெடி படமாக உருவாகிறது.

மே 2021 இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, முழுக்க, முழுக்க சென்னையில் படமாக்கப்படவுள்ளது.

இந்தப் புதிய படம் குறித்து Trident Arts நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் பேசும்போது, “Trident Arts நிறுவனத்தில் எப்பொழுதும் புதுவிதமான கதைகளை படமாக்க, ஆவலாக உள்ளோம்.

இயக்குநர் ஹரிஹரன், கதையை விவரிக்கும்போது இந்தக் கதையில் காதல், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை அம்சங்கள் நிறைந்திருப்பதை உணர முடிந்தது.

இப்பொழுது தமிழகத்த்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளோர்க்கும் மிகப் பிடித்தவர்களாக மாறியுள்ள, அஸ்வின் மற்றும் புகழ் போன்ற சிறந்த கலைஞர்களை, ஒன்றாக இந்த படத்தில் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் படக் குழு பற்றிய விவரத்தை கூடிய விரைவில் அறிவிப்போம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News