லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. இந்தப் படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த நிலையில், இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்திலும் தொடங்கியுள்ளது. இன்று இரவு 8 மணியளவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
