சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஷாருக்கானிடம் ஒருவர் “உங்களைத் தவிர வேறு யாராவது திரையுலகில் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு ஷாருக்கான் பதிலளிக்கையில், “இல்லை, அது நடக்கவே முடியாது. நான்தான் கடைசி நட்சத்திரம் என நகைச்சுவையாக கூறினார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் ஷாருக்கானை நேரில் சந்திக்க நேர்ந்தால் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, ‘உங்களை கடைசி நட்சத்திரம் என கூறிய கருத்து தவறு. நீங்கள் கடைசி நட்சத்திரம் இல்லை, நான் வருகிறேன்” எனச் சொல்வேன் என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார்.
மேலும் அவர் , “ஷாருக்கான் பெற்ற வெற்றி எனக்கு அளவில்லா ஊக்கமாக இருந்தது. அவரால் இது சாத்தியம் என்றால், நிச்சயமாக எனக்கும் அது சாத்தியம்” என்று கூறினார்.