‘பிரேமம்’ படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பாரம்பரியமான சேலை அணிவதிலும், மேக்கப் இல்லாத இயற்கையான தோற்றத்திலும் நடித்து தனிச்சிறப்பு பெற்றவர்.

தற்போது பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ராமாயணா படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சாய் பல்லவி கூறியது: “என் முதல் படத்திலிருந்து இன்று வரை, நான் பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். மிக அதிகபட்சமாக ஐ லைனர் மட்டும் பயன்படுத்தியிருக்கிறேன்.”
அவரின் பேச்சு ரசிகர்களை இன்னும் அதிகமாக ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள், “அழகு என்றால் இவ்வளவு தான்… அழகுக்கு மேல் எதற்கும் மேக்கப் தேவையில்லை என்று புகழ்ந்து பேசி வருகின்றனர்.