விஜய் நாயகனாக நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடல் வெளியானது.
இதற்கிடையே, ’லியோ’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இசை வெளியீடு நிகழ்ச்சி தமிழகத்தில் தான் நடைபெறும் என தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் தெரிவித்தார்.
தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. அதில், “பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டு அதிகரித்து வரும் கோரிக்கைகள் ஆகியவற்றால் ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆனாலும் ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடிக்கடி அப்டேட் வெளியாகும்.
பின் குறிப்பு: ஆடியோ வெளியீடு நடத்தாது பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல” என்று கூறப்பட்டு உள்ளது.