Touring Talkies
100% Cinema

Tuesday, November 25, 2025

Touring Talkies

பசுபதி, வித்தார்த் மற்றும் நடிகை லட்சுமி பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடித்துள்ள வெப் தொடரான ‘குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கிய ‘முந்தினம் பார்த்தேனே’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் லட்சுமி பிரியா சந்திரமவுலி. அதன் பின் ‘கௌரவம், சுட்ட கதை, கள்ளப்படம், மாயா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், கர்ணன், சொப்பன சுந்தரி, தணல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடித்துள்ள புதிய வெப் தொடர் ‘குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன்’ சோனி லைவ் தளத்தில் டிசம்பர் 5 முதல் வெளியாகிறது. இந்த தொடரில் பசுபதி, விதார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொடரை செல்வமணி இயக்கியுள்ளார்.

இந்த தொடரை பற்றி அவர் கூறியதாவது: ஒவ்வொரு எபிசோடின் இறுதியில் மர்மம் மேலும் ஆழமடைகிறது, இது கதையின் சுவாரசியத்தை தொடர்ந்து அதிகரிக்கச் செய்கிறது. குற்ற உணர்ச்சிக்கும், அப்பாவித்தனத்துக்கும் இடையிலான எல்லையை புரிந்து கொள்ள முடியாமல் போராடும் ஒரு உளவியல் பயணத்தை இந்த தொடர் நமக்குக் காட்டுகிறது. நம்பிக்கைக்கும் சட்டத்திற்கும் நடுவே சிக்கியபோது, ஒருவர் எவ்வளவு தூரம் செல்லத் தயார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்ட செயல்களே எதிர்பாராத ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் போது, மறைக்கப்பட்ட மர்மங்கள் வெளிப்படத் தொடங்கும். ஒவ்வொரு மறைக்கப்பட்ட உண்மையும் வெளிவரும் தருணங்களில், கதையில் பதட்டமும், உளவியல் ரீதியாக ஒரு விடுபடும் போராட்டமும், குற்ற உணர்ச்சியுடனான போராட்டமாக பிரதிபலிக்கின்றன என அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News