நவீன் டி கோபால் இயக்கத்தில், ‘அசுரன்’ படத்தில் நடித்த டிஜே அருணாசலம் மற்றும் ஜனனி நடித்த ‘உசுரே’ என்ற திரைப்படத்தின் குழுவினர் சமீபத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினர். அவர்கள் தங்களின் படக்கதையை அவருக்கு விவரித்து, படக்குழுவினரை அறிமுகம் செய்து, அவரிடமிருந்து வாழ்த்தைப் பெற்றுள்ளனர்.

சிறிய அளவிலான படக்குழுவினர் கமலஹாசனை சந்தித்தது எப்படி முடிந்தது என்று கேட்கப்பட்ட போது, இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்தவர் ஜனனி என்பதால்தான் இது சாத்தியமாகியது என தெரிவிக்கப்படுகிறது. ஜனனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மற்றும் கமல்ஹாசனின் நெருக்கமான நபராக இருந்தவர் என்பதனால், அவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் மூலமாக தனது படக்குழுவினரை அழைத்து சென்று கமலின் வாழ்த்தைப் பெற வாய்ப்பளித்துள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகியின் தாயின் பாத்திரத்தில் நடிகை மந்திரா நடித்துள்ளார். சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாகியுள்ளது. அரசியல் மற்றும் சினிமா பணி இரண்டுக்கும் இடையே நேரம் ஒதுக்கி, ஜனனிக்காகவே கமல் இந்தப் படக்குழுவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.