Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள L360 படத்தின் டைட்டில் வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மோகன்லால் நடிப்பில் தற்போது ரிலீஸுக்காக பல படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. அவரது நடிப்பில், இயக்கத்தில் உருவாகியுள்ள பரோஸ், ஜோஷி இயக்கத்தில் நடித்துள்ள ரம்பான், லூசிஃபர் இரண்டாம் பாகமான எம்புரான் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள விருஷபா ஆகிய படங்கள் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளன.

இதற்கிடையில், மோகன்லால் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் தனது 360-வது படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படத்தில் மோகன்லாலுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார் நடிகை ஷோபனா.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாலக்காடு, தேனி மற்றும் தொடுபுழா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடியும் வரை இதன் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு ‛துடரும்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மோகன்லால் ஒரு பழைய அம்பாசிடர் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News