Touring Talkies
100% Cinema

Friday, June 6, 2025

Touring Talkies

புகழ் நடிப்பில் யுவன் இசையில் உருவாகியுள்ள மிஸ்டர் ஜூ கீப்பர் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவி பிரபலமும் நடிகருமான புகழ் மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார். மாதவன் நடித்த என்னவளே படத்தை இயக்கிய சுரேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். 

ஒரு புலிக்குட்டியை பூனைக்குட்டி என நினைத்து ஹீரோ வளர்க்க, அது வளர வளர, என்ன நடக்கிறது என்ற ரீதியில் கதை நகர்கிறது. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 27ல் படம் ரிலீஸாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ் ஜோடியாக ஷிரின் நடித்துள்ளார். மற்ற படங்களில், டிவி நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த புகழ் இதில் அப்பாவி ஹீரோவாக, வன அதிகாரிக்கு பயந்து ஓடுபவராக நடித்துள்ளார். புலிக்குட்டியும் கதையில் முக்கிய கேரக்டராக நடித்துள்ளது. அந்த காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News