Touring Talkies
100% Cinema

Thursday, July 17, 2025

Touring Talkies

பிரபாஸூடன் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம் புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது – நடிகை நிதி அகர்வால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த தெலுங்கு நடிகை நிதி அகர்வால், அதன்பின்னர் ‘பூமி’ மற்றும் ‘கலகத்தலைவன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்துப் பணியை முடித்துவிட்டு, பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் பிரபாஸுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி அவர் கூறும் போது, “ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ஹரிஹர வீரமல்லு என்பது வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு உருவான ஒரு படமாகும். ஆனால், தற்போது பிரபாஸுடன் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படம், அந்த முந்தைய படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

இந்தக் கதையில் ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லை. அதனால், இந்த படத்தில் முழுவதுமாக பிரபாஸூடன் நடித்துள்ளேன். இதில் காதல் மற்றும் மற்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் இயல்பாக உள்ளன. இதனாலேயே, பிரபாஸுடன் நடித்துள்ள இந்த படம் எனக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது,” என நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News