Friday, April 12, 2024

சமையல்கட்டிலேயே வாழ்ந்து வரும் பெண்கள் பற்றிய கதைதான் இந்தப் படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்ற ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பியது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம். இப்போது இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள்.

Masala Pix நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் R.கண்ணன், M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தினைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவிச்சந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்னர்.

தயாரிப்பு  & இயக்கம் – R கண்ணன், ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம், வசனம் – சவரிமுத்து & S.ஜீவிதா சுரேஷ்குமார், கலை இயக்கம் – ராஜ்குமார்,  உடை வடிவமைப்பு – பிரதீபா பாண்டியன், புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – அய்யாபிள்ளை, எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – ஓம்சரண், மக்கள் தொடர்பு – ஜான்சன்.

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து முடிந்தது. படத்தினை  ஒரே கட்டமாக படமாக்கியுள்ளார்கள்.

‘கனா’, ‘க.பெ.ரணசிங்கம்’ என தரமான வெற்றிப் படங்களில் அழுத்தமான கதாப்பாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களைக் குவித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் குறித்து நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக் கடினம். படத்தின் அடிப்படை ஆத்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம். அதனாலேயே, நான் நிறைய ரீமேக் படங்களில் நடிக்க மறுத்திருக்கிறேன்.

ஆனால், இந்தப் படம் என்னைத் தேடி வந்தபோது கண்டிப்பாக இந்தப் படத்தில் நடித்தாக வேண்டும் என நினைத்தேன். ஏனெனில், இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது.

நான் க.பெ.ரணசிங்கம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த ஊரில் ஒரு சிறு பெண்ணை சந்தித்தேன். அவளுக்கு விபரம் தெரியாத சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும்.

இயக்குநர் R.கண்ணனின் இயக்கத்தில் நான் நடிக்கும் முதல் படம் இதுதான். அவர் ஒரு மிகச் சிறந்த இயக்குநர். அருமையான படக் குழு. படப்பிடிப்பு அனுபவமும் அற்புதமாக இருக்கிறது. படமும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது..” என்றார்.

இயக்குநர்  R.கண்ணன் இத்திரைப்படம் குறித்து பேசும்போது, “நம் கலாச்சாரத்தில் பெண்களது வாழ்க்கையின் பெரும் பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய நவநாகரீக உலகிலும் பெண்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை.

இதையெல்லாம் முகத்தில் அறைந்தாற்போல், அருமையாக சொல்லியிருந்தது  தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம். பலர் இப்படத்தை தமிழில் பலர் இயக்க முயன்றார்கள். தரமான படங்களை இயக்கியிருந்ததால் என்னை நோக்கி இப்படம் வந்தது.

நகரங்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் ஃபாஸ்ட்புட் கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது. ஆனால். கிராமங்களில் இப்போதும் பெண்கள் எந்நேரமும் சமையலறையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் கதை காரைக்குடியில் நடப்பதாக அமைத்தேன்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதால் படப்பிடிப்பு மிக எளிதாக அமைந்துவிட்டது. படத்தின் ஆன்மா கெடாமல் சமூகத்திற்கு தேவையானதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News