Friday, April 12, 2024

“தி பேமிலி மேன்’ – ‘ராஜி’ கதாபாத்திரம் அனைவரையும் திருப்திப்படுத்தியுள்ளது…” – நடிகை சமந்தாவின் பெருமை பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘தி பேமிலி மேன்’ வெப் சீரீஸ் தொடரின் இரண்டாம் பாகத்தில் ராஜி என்ற பெண் மனித வெடிகுண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சமந்தா தனது கதாபாத்திரம் அனைவரையும் திருப்திப்படுத்தும்விதமாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப்புலிகளையும் தவறான கண்ணோடத்தில் முன் வைக்கிறது என்று சொல்லி பல்வேறு தரப்பினரும் இந்தத் தொடருக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் இந்தத் தொடரில் தான் நடித்த ‘ராஜி’ என்ற கதாப்பாத்திரம் குறித்து தனது இண்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா குறிப்பிட்டிருக்கிறார்.

அது இங்கே :

இந்த ‘தி பேமிலி மேன்’ தொடரில் ‘ராஜி’ என்ற எனது கதாபாத்திரம் எப்போதும் சிறப்பானது. இந்தக் கதாப்பாத்திரத்தில் என்னை நடிக்க வைக்க அவர்கள் அணுகியபோது, அந்த ராஜி கதாபாத்திரம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும், அனைவரையும் திருப்திபடுத்தும்விதமாகவும் இருக்கும் என்று நினைத்தேன்.

இந்தப் படக் குழு ஈழப் போரின்போது பெண்கள் பட்ட கஷ்டங்களையும், வேதனைகளையும், காட்டும் டாக்குமெண்ட்ரி படங்களை எனக்குப் போட்டுக் காட்டினார்கள்.

அந்த ஆவணப் படங்களை நான் பார்த்தபோது, ​​ஈழத் தமிழர்கள் நீண்ட காலமாக பட்ட கஷ்டங்கள் மற்றும் அனுபவித்த சொல்ல முடியாத துயரங்களைக் கண்டு   நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன்.

மேற்கூறிய ஆவணப் படங்கள் சில ஆயிரம் பார்வைகளை மட்டுமே கொண்டிருப்பதை நான் கவனித்தேன், அதுதான் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தபோது, உலகம் அவர்களை எப்படிப் பார்த்தது என்பதை எனக்கு உணர்த்தியது.

மேலும், லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தையும், வீடுகளையும் இழந்துள்ளனர். எண்ணற்ற பலர் தொலைதூர நாடுகளில் உள் நாட்டு சண்டையில் பெற்றக் காயங்களை இன்னமும் தங்கள் இதயங்களிலும் மனதிலும் வாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ராஜியின் கதை, கற்பனையானது என்றாலும், ஒரு சமமற்ற போரினால் உயிரிழந்தவர்களுக்கும், அந்தப் போரின் வேதனையான நினைவில் இன்றும் தொடர்ந்து வாழ்பவர்களுக்கும் ஒரு அஞ்சலியாக இருக்கும்.

ராஜியின் கதாபாத்திரச் சித்தரிப்பு சம நிலையாகவும், நுணுக்கமாகவும் மற்றும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

ராஜியின் கதை, முன்பைவிட வெறுக்கத்தக்க அடக்குமுறைக்கும், பேராசைக்கும் எதிராக மனிதர்கள் ஒன்றிணைவதற்கு ஒரு தெளிவான, மிகவும் அவசியமான நினைவூட்டலாக அமைந்திருக்கிறது என்றே நாம் நினைக்க வேண்டும்.

நாம் அவ்வாறு செய்யத் தவறினால், எண்ணற்றவர்களுக்கு அவர்களின் அடையாளம், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும்…” என்று குறிப்பிட்டிருக்கிறார் நடிகை சமந்தா.

- Advertisement -

Read more

Local News