Friday, April 12, 2024

வரலட்சுமி-இஷான் நடிக்கும் ‘தத்வமசி’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

RES Entertainment LLP Company தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தத்வமசி’ 

இந்தப் படத்தில் ‘ரோக்’ திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள்.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


எழுத்து & இயக்கம் – ரமணா கோபிசெட்டி, தயாரிப்பு – ராதாகிருஷ்ணா தெலு, தயாரிப்பு நிறுவனம் – RES என்டர்டெயின்மென்ட் LLP., இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – ஷ்யாம் கே.நாயுடு, படத் தொகுப்பு – மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ், பாடல்கள் – சந்திரபோஸ், சண்டை இயக்கம் – பீட்டர் ஹெய்ன், மக்கள் தொடர்பு – சதீஷ்(AIM).

எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி இந்தப் படத்தை இயக்குவதன் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் தலைப்பான தத்வமசி’ என்பது “நான்தான் அது” எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரமகும்.

பண்டைய இந்து மத நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகா வாக்கியங்களில் இந்த தத்வமசி’ ஒன்றாகும். இது பிரம்மனுடன் ஆத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுகிறது.


தலைப்பு குறிப்பிடுவது போல, ‘தத்வமசி’ ஒரு தனித்துவமான கதைக் களத்துடன் கூடிய பிரம்மாண்டமான படமாக இருக்கும்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 தலைப்பைப் போலவே கான்செப்ட் போஸ்டரும் சுவாரசியமாக உள்ளது.

குண்டலி (ஜாதகம்) போன்று லோகோவில் இரத்த அடையாளங்களுடன் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோஷன் போஸ்டர் ‘தத்வமசி’ படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது.

“மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன. மோஷன் போஸ்டருக்கான சாம் சிஎஸ்ஸின் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

இந்த தத்வமசி’ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் அகில இந்திய படமாகும்.

விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள இந்த ‘தத்வமசி’ திரைப்படம், அதன் புதிய கதைக் களத்தால் மக்களை பரவசப்படுத்தும்.

- Advertisement -

Read more

Local News