நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் கூலி படத்தின் மோனிகா பாடல் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. மோனிகா என் கேரியரில் மிகவும் கஷ்டமான பாடல்களில் ஒன்று. காரணம், கடுமையான வெயில், தூசி, கொப்புளங்கள் இவை எல்லாவற்றையும் விட அதிக எனர்ஜி தேவைப்படும் நடன அசைவுகள் கொண்டது. இவை அனைத்திற்கு பிறகும், அந்த நடனம் கவர்ச்சியாகவும் எளிதாகவும் இருப்பதை உறுதிசெய்வது முக்கியம். எனவே மோனிகாவுக்கு என் அனைத்தையும் கொடுத்தேன். அதைத் திரையரங்குகளில் பார்க்க ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.மகாசிவராத்திரி நாளில், குறிப்பாக நான் உண்ணாவிரதம் இருந்தபோதுகூட இந்தப் பணியில் என்னுடன் நின்று எனக்கு ஆற்றலை அளித்த நடனக் கலைஞர்களுக்குச் சிறப்புப் பாராட்டுகள்” என கூறியுள்ளார் .
