தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் நடிகர் விஜய்க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளை கூறி வருகிறார். அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு அவரை தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார் விஜய்.
இப்போது, பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து உள்ளார். ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய்யின் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.