Wednesday, April 10, 2024

தலைவர் 171: வில்லன் இவரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தலைவர் 171வது படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி கதாநாயகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் – லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இதுதவிர தலைவர் 171 படத்தில் யாரெல்லாம் இணைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் மட்டும் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க முன்னணி ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்து மக்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே விஜய்சேதுபதி இல்லன் வில்லன் ரோலில் நடிக்கமாட்டேன் என கூறியிருந்த நிலையில், இந்த படத்தில் நடிப்பரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

- Advertisement -

Read more

Local News