Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விமர்சனம்: டக்கர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பணக்காரன் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வருகிறார் குணசேகரன் (சித்தார்த்). பல்வேறு இடங்களில் வேலை செய்கிறார். ஆனால் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வேலை செய்ய வேண்டும் என நினைப்பதால் குணசேகரனால் எங்குமே தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து கேப் டிரைவராகிறார்.

இதற்கிடையே சமூக விரோத செயல்களில் ஈடுபட்டும் பணம் சம்பாதிக்கும் கும்பலையும் காட்டுகிறார்கள்.
அந்த கும்பல் பணத்திற்காக இளம் பெண்களை கடத்தி விற்பனை செய்கிறது. இந்நிலையில் அந்த கும்பலின் பாதையில் வருகிறார் சித்தார்த். அதன் மூலம் அவருக்கு பல லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதற்கிடையே அவரின் கார் சேதம் அடைகிறது. இதனால் சித்தார்த்தின் வேலைக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

வாழ்க்கை முடிந்துவிட்டது என சித்தார்த் நினைக்கும்போது   பணக்கார பெண்ணான லக்கியை ( திவ்யான்ஷா கௌஷிக்) சந்திக்கிறார். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பணம் தான் காரணம் என நினைப்பவர் லக்கி. இந்நிலையில் சித்தார்த், திவ்யான்ஷாவின் வாழ்க்கை பணம், பதவி உள்ளிட்டவைகளால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி எப்படி சிறப்பாக இருக்கிறது என்பதே கதை.

பணம் மற்றும் வாழ்க்கை பற்றி மாறுபட்ட கருத்துகள் கொண்ட இரண்டு பேரை இயக்குநர் காட்டிய விதம் ரொம்ப சுவராஸ்யமாக இருக்கிறது. ஆனால் திரைக்கதை வலுவாக இல்லை. ஒரே நேரத்தில் பல விஷயங்கள் நடக்கிறது. அதனால் தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் 10 நிமிடத்திற்கு ஒரு முறை ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என பல்வேறு எமோஷன்களை ஃபீல் பண்ண வேண்டியிருக்கிறது. பலதரப்பட்ட எமோஷன்கள் திணிக்கப்பட்டது போன்று இருக்கிறது.

படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சித்தார்த். இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. யோகிபாபுவின் ஒன்லைனர்கள் அனைத்து இடங்களிலும் கை கொடுக்கவில்லை. திவ்யான்ஷா கௌஷிக்கிற்கு நடிக்க பெரிதாக ஸ்கோப் இல்லை.

நிவாஸ் பிரசன்னாவின் இசை நன்றாக இருக்கிறது.   டக்கர் கண்டிப்பாக பிடிக்கும்.

- Advertisement -

Read more

Local News