Wednesday, April 10, 2024

சூரகன்  – விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் திரைப்படம் சூரகன். படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சதீஷ் கீதா குமார்.

இந்த படத்தில்  கார்த்திகேயன்,ஈகை வேந்தன், சுபிக்ஷா கிருஷ்ணன் , இலக்கியா, சுரேஷ் மேனன்  தேவராஜ், பாண்டியராஜன், சிதம்பரம், ரேஷ்மா பசுப்புலேடி,லக்ஷ்மி அக்கா, வின்சென்ட் அசோகன்,சேது, மன்சூர் அலிகான் , மாமாமியா, வினோதினி சித்திரைச் செல்வி, முக்கிய கதாப்பத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்துள்ளார்.  வரதராஜன், மிப்புசாமி,பிரபா என பலர் நடித்துள்ளனர்.

’சூரகன்’ படத்தின் கதை என்ன? இளம் போலீஸ் அதிகாரியாக ஈகன் (கார்த்திகேயன்) ஒரு விபத்தால் பார்வை குறைபாடு ஏற்பட்டு எல்லாமே தலைகீழாக தெரிய ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக பணியின் போது தவறுதலாக குற்றவாளியை சுடாமல் ஒரு அப்பாவி பெண்ணை சுட்டு விடுகிறார். இதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  தன் அக்கா குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு பெண் அடிபட்டு கிடப்பதை அறிந்து அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்.

ஆனால் அந்தப் பெண் இறந்து விடுகிறார். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முயலும் போது இறந்த பெண் பணக்காரர் வரதராஜனின் (நிழல்கள் ரவி) பேத்தி என்பதை அறிந்து தகவல்களை சேகரிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணுடன் இருந்த மற்ற இரு பெண்களும் கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணம் யார்? யார் இந்த கொலைகளை செய்தார்கள்? அவர்களை ஈகன் கண்டுபிடித்தாரா? மீண்டும் பணியில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஈகை வேந்தனாக கார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக, துடிப்புடன் நடிப்பை வெளிப்படுத்திய விதம். குறைபாடு ஏற்பட்டவுடன் துவண்டு விடாமல் துப்பறிவாளராக களமிறங்கி கொலைகாரர்களை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் என்று பரபரவென்று படத்தை நகர்த்த உதவுகிறது.

காதலியாக சுபிக்ஷா கிருஷ்ணன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்.கார்த்திக்,  திரவ் பாடல் வரிகளுக்கு அச்சு ராஜாமணி இசையும், யனமந்திர ராகவ் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

எடிட்டர் ராம் சுதர்ஷன் காட்சிகள் காண்பித்த விதம் அருமை. தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஒரு கொலையை துப்பறிய செல்லும் இடத்தில் எதிர்படும் சிக்கல்களை சமாளித்து ஜெயிப்பதை அரசியல் வாடையுடன் அதிரடி ஆக்ஷன் கலந்து கூறியிருக்கிறார் இயக்குனர் சதீஷ் கீதா குமார்.மொத்தத்தில் சூரகன் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.

- Advertisement -

Read more

Local News