Monday, June 21, 2021
Home சினிமா செய்திகள் “இப்படியொரு காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை” – ‘மீண்டும்’ படத்தின் சிறப்பு

“இப்படியொரு காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை” – ‘மீண்டும்’ படத்தின் சிறப்பு

அஜித்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற  ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா.

‘கந்தர்வன்’, ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ‘ஹீரோ சினிமாஸ்’.

மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் ‘மீண்டும்.’

தயாரிப்பாளர் மணிகண்டன் இந்த ‘மீண்டும்’ படத்தில் ‘கதிரவன்’ என பெயர் மாற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். அனேகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார்.

மேலும், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, யார்’ கண்ணன், ‘கேபிள்’ சங்கர், சுப்ரமணிய சிவா, பிரணவ் ராயன், களவாணி’ புகழ் துரை சுதாகர், சுபா பாண்டியன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், ராதிகா நடனப் பயிற்சியையும் அளித்துள்ளனர். தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பையும், ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவையும், நாகராஜ் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர். கதை, திரைக்கதை. வசனம், எழுதி இயக்கி உள்ளார் சரவணன்சுப்பையா. ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.

தாய் நாட்டுக்கு எதிரான முக்கிய பிரச்சனை ஒன்றை குற்றப் புலனாய்வு துறை அதிகாரியான கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறது. தாய் நாட்டுப் பற்று அதிகம் உள்ள கதிரவன் இந்த உத்தரவை சவாலாக ஏற்று களம் இறங்குகிறார்.  கடமையை செய்ய செல்கிறார்.

இவர் வருகையை கண்டுபிடித்துவிட்ட எதிரிகள் அவரை பிடித்து தனிமைச் சிறையில் அடைத்து மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்கின்றனர். சித்திரவதையின் உச்சகட்டமாக நடைபெறும் அந்த கொடூர சம்பவங்கள் அதிர்ச்சியின் உச்சம்.

அந்த காட்சி இதுவரை ஆசிய திரைப்படங்களிலேயே வந்திராத காட்சி என்றால் அது மிகையாகாது. அந்தக் காட்சியில் நாயகனான கதிரவன் துணிச்சலுடன் நடித்ததை இயக்குநர் உட்பட படக் குழுவினர் அனைவரும் கை தட்டி பாராட்டி வாழ்த்தினார்கள்.

தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள மீண்டும்’ திரைப்படம் ஊரடங்கு முடிந்தவுடன் திரையரங்குகளில் வருகிறதா..? ஊரடங்கின்போதே ஓ.டி.டி. தளத்தில் வரப் போகிறதா…? என்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..?

நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...

சென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.

Spotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…!

இன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.