கவினை வைத்து இயக்கிய‘ஸ்டார்’ படத்திற்குப் பிறகு, இளன் தனது அடுத்த இயக்குநர் முயற்சியாக தனுஷை நாயகனாக வைத்து படம் இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியானது. ஆனால் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, தனுஷ் பல்வேறு புதிய திட்டங்களில் ஈடுபட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விட்டார். இதன் காரணமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தன் கால அட்டவணையில் காலி நேரம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, இளன் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளாராம்.

தனது அடுத்த திரைப்படத்தில் தானே கதாநாயகனாக நடிக்கத் தீர்மானித்துள்ளார் இளன். இந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளன. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. காதலை மையமாகக் கொண்டு, ஒரு முழுமையான காதல் கதையாகவே இளன் இந்தச் சினிமாவை உருவாக்கியுள்ளார். மேலும் விரைவில் படப்பிடிப்பும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ‘லவ் டுடே’ திரைப்படத்தின் வாயிலாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நடிகராக அறிமுகப்படுத்திய நிறுவனம் ஏஜிஎஸ். தற்போது அவர் முன்னணி ஹீரோவாக வளர்ந்துள்ளார். இதேபோன்ற பாணியில், இளனையும் கதாநாயகனாக மாற்ற முடிவு செய்துள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.