‘புஷ்பா’ பட பிரபலம், ராஷ்மிகா மந்தனா டோலிவுட், பாலிவுட் என பிஸியாக இருக்கிறார். இதற்கிடையே, வெங்கி குடுமுலா இயக்கத்தில், நிதின் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆனார்; இதன் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.
ஆனால் படத்தில் இருந்து தற்போது திடீரென விலகிவிட்டார். காரணம் ஏதும் சொல்லவில்லை.
இந்த நிலையில் அவரது கதாபாத்திரத்துக்கு ஸ்ரீலீலாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.
இதுகுறித்து இயக்குநர் இயக்குநர் வெங்கி குடுமுலா கூறும்போது, “குறிப்பிட்ட வேடத்துக்கு ராஷ்மிகா பொறுத்தமாக இருப்பார் என்றுதான் அவரை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் திடீரென விலகிவிட்டார். இப்போது ஸ்ரீலீலாவை புக் செய்துள்ளோம். இவர் ராஷ்மிகாவைவிட சிறப்பாக நடிக்கிறார்” என்றார்.