தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் ஒடேலா, நானி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு இயக்கிய படம் ‘தசரா’. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது.

‘தசரா’ படத்தின் επι επιஇ வெற்றியைத் தொடர்ந்து, நானியின் 33-வது படத்தையும் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘தி பாரடைஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். ‘குலாபி’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை, அனுராக் ரெட்டி மற்றும் சரத் சந்திரா ஆகியோருடன் இணைந்து ஸ்ரீகாந்த் ஒடேலா தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை சேத்தன் பந்தி இயக்கவுள்ளார். மேலும், இது 2009 ஆம் ஆண்டு கோதாவரிகானியில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.