தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெய், தற்போது இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், அவருடன் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘கருடா’ ராம், ஸ்ரீமன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் – திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், போலீசாரிடம் ஜெய் அடிவாங்கவதை போல் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இப்படம் குறித்து நடிகர் ஜெய் பேசியபோது, இதற்கு முன்பு படத்தின் சில ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகிவிட்டன. இதில் நான் நடித்த சில காட்சிகள் எனக்கு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, போலீசாரிடம் அடிபடுவதை உருவாக்கும் காட்சிகளை நடித்தபோது, என் உடல் கூட நடுங்கியது. இந்த திரைப்படத்தின் மையக்கரு, நம் சமூகத்தில் தற்போது நடைபெறும் ஒரு முக்கிய பிரச்சனையைச் சுற்றியது. பொதுவாக மனதைத் தொடும் கதைகளில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். அதேபோல் தான் என் படங்களும் அமைகின்றன என்றார்.