சிம்பு நடிக்கவுள்ள படத்தைப் பற்றிய சமீபத்திய பேட்டியில் வெற்றிமாறன் கூறுகையில், வடசென்னை’ படம் தொடங்கப்பட்ட போது முதலில் சிம்புதான் நாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. பின்னர் அந்த கதையில் தனுஷ் நடிக்க வந்தபோது, கதையை அவருக்கேற்றவாறு மாற்றினேன். இப்போது சிம்பு நடிக்கவுள்ள படத்தின் கதை, முதலில் சிம்பு நடிக்கவிருந்த வடசென்னை கதைதான்.

அதே காலகட்டத்தில் வேறொரு இடத்தில் சம்பவங்கள் நடப்பது போல கதை அமையும். ’வடசென்னை’ படத்தில் நடித்த பல கதாபாத்திரங்களும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. ஆனால் ’அன்பு’வாக நடித்த தனுஷ் மட்டும் இதில் இருக்க மாட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ‘வடசென்னை’ கதையின் காலகட்டத்தில் வேறொரு பக்கத்தில் நடக்கும் கதையாக இந்த படம் இருக்கும் என்பது உறுதியாகிறது. ஆனால் இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தற்போது புரியாத புதிராகவே உள்ளது.