Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

அமெரிக்கன் பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த ‘சீதா ராமம்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துல்கர் சல்மான், ஹனு ராகவபுடி, வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ படம், வெளியான முதல் வாரத்தில் இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது.

இத்திரைப்படம் அமெரிக்கன் பாக்ஸ் ஆபிஸில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முன் பதிவுடன் ஒரு மில்லியன் டாலர் வசூலை எட்டிப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

போருக்கு இடையில் நடைபெறும் காதல் கதையின் உணர்ச்சிகரமான பயணம் ரசிகர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளித்திருக்கிறது.விமர்சகர்களும், பார்வையாளர்களும் இந்த காவிய காதல் படைப்பை ரசித்து வருகிறார்கள்.

அண்மையில் விமர்சனத்தையும், வசூலையும் ஒருமித்து பெற்ற படைப்பு என்றால் அது ‘சீதா ராமம்’ மட்டும்தான் என்பது ரசிகர்கள் அளித்த தீர்ப்பாகும். 

முன்னணி கலைஞர்களான துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் திரையில் நிகழ்த்தும் மாயாஜாலம், இயக்குநர் ஹனு ராகவபுடியின் தனித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம், விஷால் சந்திரசேகரின் அற்புதமான மயக்கும் இசை, பி.எஸ்.வினோத்தின் வியக்க வைக்கும் காட்சி அமைப்பு, வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா பட நிறுவனங்களின் தரமான தயாரிப்பு… ஆகிய பல அம்சங்கள் இணைந்து இப்படத்தை உன்னதமான படைப்பாக மாற்றி இருக்கிறது.

தற்போது புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இருப்பினும், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளம் என அனைத்து பகுதிகளிலும் இரண்டாவது வாரத்திலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. மேலும் சுதந்திர தின விடுமுறையான இன்றும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு தரமான படைப்பிற்கு, மக்களின் ஆதரவு என்றென்றும் உண்டு என்பது, ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News