Friday, April 12, 2024

‘இரும்புத்திரை’ மித்ரனின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கார்த்தி நடிக்கும் 22-வது படம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் ‘சர்தார்’.

சமீபத்தில்தான் கார்த்தியின் நடிப்பில் ‘சுல்தான்’ என்ற படம் வெளியானது. இதற்கடுத்து கார்த்தி தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அதன் படப்பிடிப்பு கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக கார்த்தி தனது முடியை நீளமாக வளர்த்து வைத்திருக்கிறார். இந்தக் கெட்டப் இந்தப் படம் முடியும்வரையிலும் இருக்க வேண்டும் என்பதால் ‘பொன்னியின் செல்வனை’ முடிக்காமல் கார்த்தியால் அடுத்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் போக முடியாத சூழல் தற்போது இருந்து வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை இன்றைக்கு கார்த்தி வெளியிட்டுள்ளார். ‘சர்தார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்தப் படத்தை பிரின்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் கார்த்தியுடன் ஜோடி சேர்வது இதுவே முதல்முறையாகும்.

மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு  மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே (Chunky Panday) முதல் முறையாக இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், கலை இயக்கம் – கே.கதிர், படத் தொகுப்பு – ரூபன், வசனம் – பொன்.பார்த்திபன், பிபின் ரகு, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், வி.எஃப்.எக்ஸ் – ஹரிஹரசுதன், உடைகள் வடிவமைப்பு – டி.பிரவீன் ராஜா, சிறப்பு ஒப்பனை – பட்டணம் ரஷீத், கேஸ்டிங் இயக்குநர் – வர்ஷா வரதராஜன், தயாரிப்பு நிர்வாகம் – பால்பாண்டி, தயாரிப்பு மேலாளர் – ஜெ.கிரிநாதன், புகைப்படங்கள் – ஜி.ஆனந்த்குமார், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், விளம்பர வடிவமைப்பு – எஸ்.சிவக்குமார், சிவா டிஜிட்டல் ஆர்ட், இணை தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி.

இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ‘சர்தார்’ என்ற பாரசீக சொல்லுக்கு ‘தலைவன்’ அல்லது ‘படைத் தளபதி’ என்று அர்த்தமாம்.

படத்தின் மோஸன் போஸ்டர் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்தால் இதில் கார்த்தி, இந்திய தேச உளவாளி போல் தெரிகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மூன்று நாடுகளை உள்ளடக்கிய கதையாகவும் இருக்கிறது.

‘இரும்புத்திரை’ போன்ற மக்கள் அறிந்திருக்காத விஷயங்களை உள்ளடக்கிய கதை, திரைக்கதையில் படமெடுத்து வெற்றிப் படமாக்கியவர் இந்தப் படத்தின் இயக்குநர் மித்ரன்தான் என்பதால், இந்த ‘சர்தார்’ படத்தின் கதையும் அதேபோல் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

படத்தின் கதை வெவ்வேறுவிதமான இடங்களில் பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன்  நடப்பதால்,  தென்காசி  தொடங்கி சென்னை  மற்றும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பினை நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News