ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் தன்னை காமெடியே செய்யவிடவில்லை என்று குற்றம் சாட்டிப் பேசினார் நடிகர் சந்தானம்.
மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம்-ரியா சுமன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசும்போது, “இந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், அதில் பல மாற்றங்களை இயக்குநர் செய்துள்ளார். தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா – மகன் கதை இருக்கும். அதை அந்த படத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை. அதை இந்த படத்தில் இயக்குனர் எடுத்து வந்து இருக்கிறார். அதனால் இந்த படம் புதுவிதமாக இருக்கும்.

என்னை கொஞ்சம்கூட காமெடியே செய்ய விடலை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுக் கொண்டேன், படத்தில் சில ஆக்சன் காட்சிகளை இயக்குநர் வைத்துள்ளார். அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
ரியா சுமன், புகழ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரு புதுவிதமான கதாபத்திரமாக தோன்றுவார்கள். யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்புக்கு நன்றி கூறி ஆக வேண்டும், அவர்கள்தான் படத்தை மேம்படுத்தியுள்ளனர்…” என்றார்.